முத்தலாக் தடை சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? அதை ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் ஆதரிக்கிறார்கள்? டீட்டெய்ல் ரிப்போர்ட்!

ஒருவழியாக மோடியின் தீவிர ஆசைகளில் ஒன்றான முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.


அதனால், முத்தலாக் சொல்லி விவாகரத்து கோரும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுவது உறுதியாகிவிட்டது. இந்த மசோதா பின்வரும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த மசோதாவில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாமா? இந்த முத்தலாக் தடை சட்டம் மூலம் மனைவி தனது கணவன் மீது புகார் கொடுக்கலாம். அல்லது அந்த பெண்ணின் ரத்த உறவினர்கள், திருமணம் மூலம் உண்டான உறவினர்கள் புகார்கள் கொடுக்கலாம்.

இந்த சட்டம் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆண் 3 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார். அதே சமயம் இந்த சட்டம் மூலம் பெயில் பெற முடியும். ஆனால், குற்றம்சாட்டிய பெண்ணின் அனுமதியுடன் மட்டுமே மாஜிஸ்ட்ரேட் பெயில் வழங்க முடியும். இந்த சட்டம் மூலம் கணவனும், மனைவியும் ஒருவருக்கு ஒருவர் பேசி, தங்களுக்குள் சுமூகமான தீர்வை கொண்டு வந்து வழக்கை வாபஸ் செய்ய விரும்பினாலும் செய்யலாம்.

விவாகரத்து செய்த கணவனுடன் மீண்டும் பெண் சேர வேண்டும் என்றால் அந்த பெண் வேறு ஒருவரை மணமுடித்து பின் விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்று நிக்கா ஹலாலா முறை ஒழிக்கப்படும். அதற்கு பதிலாக இந்த சட்டம் மூலம் சமாதானம் செய்து கணவனும், மனைவியும் ஒன்று சேரலாம். அதேபோல் முத்தலாக் பெற்ற பெண் இந்த சட்டம் மூலம் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியும். இந்த பணத்தை மாஜிஸ்டிரேட் நிர்ணயம் செய்வார்.

அதேபோல் மைனர் குழந்தைகளை பாதுகாக்கும் உரிமை இந்த சட்டம் மூலம் மனைவிக்கு வழங்கப்படும். குழந்தைக்கு உரிமைகோரும் உரிமை பெண்ணுக்கே வழங்கப்படும். சட்டம் எப்படி இருந்தாலும், அதனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் நன்மையும் தீமையும் விளைகிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவோம் மக்களே...