சமூக வலைதளங்களில் 10 year challenge என்கிற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது.
வைரல் ஆகும் 10 year challenge! அப்டினா என்னனு தெரிஞ்சிக்கங்க?
ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தற்போது டிரன்டிங் என்ன
என்றால் 10 year challenge தான். உலக அளவில் பிரபலமானவர்கள் முதல் சமூக வலைதளங்களுக்கு
புதியவர்கள் வரை அனைவரும் இந்த 10 year challengeல் பங்கேற்கிறார்கள்.
அப்படி என்றால் இந்த
10 year challenge என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள். அதை புரிந்து கொள்ள பெரிய
அறிவு எல்லாம் தேவையில்லை. இருக்கும் சேலஞ்சிலேயே மிக எளிதான சேலஞ்ச் இந்த 10 year
challenge தான்.
ஆமாம் நீங்கள் தற்போது
அண்மையில் எடுத்த உங்கள்புகைப்படத்தையும் 10 வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும்
ஒன்றாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும். இது தான் 10 year challenge,
பிரபல நடிகர்கள்
முதல், விளையாட்டு வீரர்கள், டெலிவிசன் ஆன்கர்கள், அரசியல்வாதிகள் என பலரும் இந்த 10
year challengeல் பங்கேற்று தங்கள்புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் கவர்ச்சி நடிகைகள் வெளியிட்டு வரும் 10 year challenge புகைப்படங்களுக்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கீழே அவர்கள் வெளியிட்டுள்ள 10 year challeng புகைப்படங்களை பாருங்கள்.