ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முழக்கத்தை முன்வைத்து டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்ற சென்ற அமைச்சர் சிவி சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிவி சண்முகத்துக்கு நேர்ந்த அவமானம்! என்ன நடந்தது டெல்லியில்?
நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இதன் மூலம் நேரம் மற்றும் பணம் மிச்சமாகும் என்பது மோடியின் நிலைப்பாடு. இது குறித்து பேச இந்தியாவில் உள்ள அனைத்து பிரதான அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசுவதற்கு டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் புறப்பட்டுச் சென்றார். ஆனால் கட்சியின் தலைவர்கள் அல்லது உயர் மட்ட நிர்வாகிகள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்று பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி எவ்வளவு முயன்றும் கடைசிவரை சீவி சண்முகத்திற்கு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுகவிற்கு உடன்பாடு இல்லை என்று ஒரு புரளியை அதிமுக தரப்பில் டெல்லியில் இருந்து கிளம்பி விட்டது. தேர்தல் விவகாரங்கள் குறித்து பேச வேண்டியது குடியரசுத் தலைவர்தான் பிரதமர் அல்ல என்கிற ரீதியில் அதிமுக எம்பி வைத்தியலிங்கம் கூறியதாக சில தகவல்கள் கசிந்தன.
ஆனால் இவற்றையெல்லாம் அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. சிவி சண்முகம் கூட்டத்தில் பங்கேற்கவே செல்லவில்லை என்ற பின் வாங்கியுள்ளது. அப்படி என்றால் பிரதமர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அதிமுக விற்கு ஏன் அழைப்பு வரவில்லை என்றும் அப்படி அழைப்பது இருந்தால் ஏன் அதிமுகவிலிருந்து முதலமைச்சர் துணை முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தக் கேள்விகளுக்கு அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறது பிரதமர் மோடியின் மிகப் பெரிய கனவு என்றும் அதில் பங்கேற்க கட்சியின் தலைமைக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதிமுகவில் எந்த முக்கிய பொறுப்பு வகிக்காத மாவட்டச் செயலாளரான சீவி சண்முகத்தை அனுப்பி வைத்ததை பிரதமர் அலுவலகம் ஏற்கவில்லை என்றும் அதனால் தான் அதிமுக தரப்பிலிருந்து யாரையும் கூட்டத்தில் அனுமதிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது.