அமெரிக்காவும், சீனாவும் தங்கள் குணத்தை காட்டிவிட்டன. இந்தியா என்ன செய்யப்போகிறது.

நாயைக் கூட்டிவந்து நடுவீட்டில் வைத்தாலும் என்ற ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் இப்போது அமெரிக்காவும் சீனாவும், தாங்கள் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.


ஆம், ஹைட்ரோ குளோரோ குயின் மருந்தை வழங்காவிட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இத்தனைக்கும், இந்தியா அந்த மருந்தை அனுப்புவதற்கு முழு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், தான் ஒரு பெரியண்ணன் என்பதை நினைவூட்டும் வகையில் எச்சரிக்கை செய்துள்ளது.

அதேபோன்று சீனாவும் எப்போதும் தன்னுடைய வணிகத்திலும், தன்னுடைய பிடிவாதத்திலும்தான் உறுதியாக இருக்கும் என்பதை அதன் சமீபகால நிலைகள் உறுதிபடுத்துகின்றன. அதாவது, இப்போது மருத்துவ சாதனங்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையி நிலையில் கொள்ளை விலையில் ஏற்றுமதி செய்கிறது.

அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தலையில் தூக்கி கொண்டாடப்பட்ட சீன, அமெரிக்க அதிபர்களின் போக்கு இந்தியாவுக்கு அதிர்ச்சியைத்தான் உண்டாக்கியுள்ளது 

அண்மைக்கால சீனா தன் நன்மைக்கு அப்பாற்பட்டு சிந்திக்காது என்பதும், அமெரிக்கா பெரிய அண்ணன் போக்கை ஒருபோதும் கைவிடாது என்பதும் உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி.