மருத்துவமனையில் திடீர் அனுமதி! அவசர அறுவை சிகிச்சை! அமித் ஷாவுக்கு என்ன ஆச்சு? அலறும் பாஜக!

பா.ஜ.க.வுக்கு இப்போது நேரம் சரியில்லை. சூன்யம் வைத்துவிட்டதாக அவர்கள் கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளியே வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.


அந்த நிலையில்தான், திடீரென அமித் ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செய்தி பரவியது. அகமதாபத்தில் உள்ள குசும் தீரஜ்லால் மருத்துவமனையில் அமித்ஷா இன்று காலை 9 மணிக்கு திடீரென அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே பல்வேறு ஆய்வுகள் எடுக்கப்பட்டுவிட்டதால், இன்று அவர் மருத்துவமனையில் சேர்ந்ததும், அவருக்கு சிறிய அளவு மயக்கமருந்து கொடுக்கப்பட்டது.

அதன்பின், அமித்ஷாவின் பின் கழுத்தில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை எளிமையாக முடிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் கேள்விப்பட்டதில் இருந்தே பா.ஜ.க..வினர் துடித்துப் போயிருக்கிறார்கள்.

இப்போது அமித்ஷாவை சந்தித்து ஆறுதல் சொல்ல ஒவ்வொரு நிர்வாகிகளும் துடித்து வர, அகமதாபாத்தில் இருந்து அதிரடி உத்தரவு வந்ததாம். ஆம், யாரும் அமித்ஷா நலம் விசாரிக்க வர வேண்டாம் என்று சொல்லப்பட்டதாம். 

வாய்ப்பு போச்சே என்று நம்மூர் அரசியல்வாதிகள் அலறுகிறார்கள்.