லண்டலின் திருமாவுக்கு என்னதான் நடந்தது? பணம் தூக்கி வீசியது யார்? வைரல் வீடியோ!

தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்வதற்கு குட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவலுடன் இருப்பது உண்டு.


ஏனென்றால், அங்கே சென்றுவந்தால் நல்ல ஓய்வு கிடைப்பதுடன் பணமும் ஓரளவு கையில் புரளும். அதற்காகவே அவ்வப்போது லண்டன், ஆஸ்திரேலியா என்று சுற்றுப்பயணம் செய்வார்கள்.

அந்த வகையில் இப்போது திருமாவளவன் லண்டன் போய்வந்த விவகாரம்தான் சந்தி சிரிக்கிறது. லண்டனுக்குச் சென்ற திருமாவளவனிடம், தமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் கட்சியுடன் ஏன் கூட்டு வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு விடுதலைப் புலிகள் சொன்னதைக் கேட்டுத்தான் நடந்தேன் என்று திருமா சொன்னாராம்.

அதைக் கேட்டு டென்ஷனான தமிழர் ஒருவர், ‘நீ பணத்துக்காகத்தானே வந்தே... இந்தா பொறுக்கிகோ’ என்று தூக்கி வீசியதாக வைரல் வீடியோ பரவியது. 

இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, ‘‘லண்டனில் எனது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க.வோடு கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ஒருவர் வெளியேற்றப்பட்டார். ஆனால் சிலர் அபாண்டமாக அவதூறு பரப்பிவருகிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை’’ என்று தெரிவித்தார். 

அதுதவிர, ‘‘காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளது இது ஜனநாயக படுகொலை, காஷ்மீரில் இன்னும் பழைய நிலை திரும்பவில்லை , சுமூக நிலை திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை காவல்துறையினரின் முன்னிலையிலயே உடைக்கபட்டிருக்கிறது காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சிலை உடைப்பின் போது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிலை உடைப்பு வேதனைக்குரியது கண்டனத்துக்குரியது, இந்தியாவிலயே எங்கும் இல்லாத அநாகரிகம் மற்றும் தமிழகத்தில் அரங்கேறுகிறது, சிலை உடைப்பு காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் உறுதுணையாக இருந்துள்ளனர் 

அதானி, அம்பானியின் முதலீட்டுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நடவடிக்கை தான் காஷ்மீர் விவகாரம், ஜி.எ.ஸ்.டி. வரியால் தொழில்துறை பாதிக்கப்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் இந்திய பொருளாதாரம் அதளபாதளத்திற்கு சென்றுள்ளது,

இதனை வெளியிட்டதால் தான் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, இந்தியாவில் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது என்று பேசினார்.