அமித் ஷா உடல்நிலை பற்றி பிபிசி என்ன சொல்கிறது!

தற்போது நிதின் கட்கரியும் அமித் ஷாவும் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கிறார்கள். இதுகுறித்து பிபிசி வெளியிட்டிருக்கும் செய்தி இது.


பொதுவாக மிக முக்கிய பிரமுகர்கள், மத்திய அமைச்சர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது அவர்களின் உடல்நிலை தொடர்பான தகவலை அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும்.

ஆனால், அமித் ஷாவின் உடல்நிலை தொடர்பாக தகவல் தெரிவிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடமும் இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக புதன்கிழமை இரவுவரை செய்தியாளர்கள் வற்புறுத்தியபோதும், அது பற்றிய தகவல்களை வெளியிடாமல் அதிகாரிகள் தவிர்த்து வருகிறார்கள்.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை ஹிந்தி திவஸ் எனப்படும் ஹிந்தி மொழிகள் தினத்தையொட்டி அமித் ஷா காணொளியில் தோன்றிப்பேசும் பதிவு செய்யப்பட்ட காணொளியை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஹிந்தி மொழி தொடர்பாக அவர் வலியுறுத்திய சில கருத்துகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மொழி உரிமை சர்ச்சையை தூண்டியது. அந்த காணொளி எப்போது பதிவு செய்யப்பட்டது என்பதையும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெளியிட மறுத்தனர்.