சங்க காலத்தில் புகழ்பெற்ற தினையில் என்னவெல்லாம் சத்து இருக்குது??

உலக அளவில் இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகும் தானிய வகைகளில் ஒன்று இனிப்பு சுவை வாய்ந்த தினை. தேனும் தினை மாவும் என்று சங்ககால பாடல்களில் இதன் மகிமை போற்றப்பட்டுள்ளது.


இதனை சாதம், கஞ்சி, களி அல்லது லட்டு போன்ற தின்பண்டமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இறடி, ஏனல், கங்கு போன்ற பெயர்களாலும் தினை அழைக்கப்படுவதுண்டு.

• உடலுக்கு வலிமையும் தின்மையும் கொடுக்கக்கூடியது தினை. வாயுவைப் போக்கி உடல் வீக்கங்களை குறைக்கும் தன்மை கொண்டது.

• மற்ற தானியங்களைவிட இரும்புச்சத்து மற்றும் கால்சிய சத்து தினை மாவில் அதிகம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

• தினையை மாவாக்கி பாலுடன் கலந்து கொடுத்தால் உடல் பலம் பெறும், தளர்ச்சியடைந்த உடல் சுறுசுறுப்படையும்.

• உடல் சூடு உண்டாக்கும் தன்மை கொண்டது தினை. மேலும் வாயு, கபத்தை போக்கும் தன்மையும் உண்டு.

அதிகப் பசியை உண்டாக்கும் தன்மை தினைக்கு உண்டு. அதனால் உடல் பருமன் உள்ளவர்கள் இதனை குறைந்த அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.