என்னப்பா, அன்வர் ராஜா இப்படி சொல்றாரு? அப்படின்னா அப்படித்தானோ..?

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காத ஏக்கத்தில் இருந்தவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. அதனால், மன வருத்தத்தில் இருந்தார் என்பது எல்லோருக்குமே தெரியும்.


இந்த நிலையில்தான், அவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்வதாக செய்தி பரவியது.இந்த செய்தி அறிந்ததும் அன்வர் ராஜா ஒரு மறுப்பு செய்தி வெளியிட்டு இருக்கிறார். அந்த செய்தி இதுதான். ‘‘உயிர் உள்ளவரை புரட்சிதலைவரின் ரசிகனாக, புரட்சிதலைவியின் உண்மை தொண்டனாக என்றும் கழக பணியில் இருப்பேன்.

நான் தி.மு.க.விற்கு செல்வதாக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஒரு பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து விசாரணை செய்தபோது, அடுத்து அ.தி.மு.க.வுக்கு நல்ல எதிர்காலம் இல்லைன்னு பலரும் தி.மு.க.வுக்கு போய்க்கிட்டு இருக்காங்க. அங்கே போனதும் பதவியும் கிடைக்குது. அதனால் அன்வர் ராஜா இப்போ போகலைன்னாலும் நிச்சயம் சீக்கிரம் போய்விடுவார் என்கிறார்கள்.

மேலும், இதுவரை கட்சி மாறும்போது, யாராவது ஒப்புக்கொண்டது உண்டா? இதுவும் அப்படித்தான் என்கிறார்கள். அதுசரி, பார்க்கத்தானே போறோம், அன்வர்ராஜா ஆட்டத்தை.