மேடையில் செல்பி எடுக்க முயன்ற தொண்டர்! அன்புமணி என்ன செய்தார் தெரியுமா?

சேலத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் செல்பி எடுக்க முயன்ற தொண்டர் ஒருவரிடம் அன்புமணி ராமதாஸ் நடந்துகொண்ட விதம் வைரலாகி வருகிறது.


சேலம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் அன்புமணி இராமதாசு உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் வெள்ளமென தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பிறகு மேடையில் இருந்து இறங்க அன்புமணி ஆயத்தமானார்.

அப்போது கூடியிருந்த தொண்டர்கள் அன்புமணியை நோக்கி கையசைத்தனர். இதனை அடுத்து அன்புமணியும் மேடையில் நின்றபடியே தொண்டர்களை நோக்கி கையசைத்து கொண்டிருந்தார். அப்போது மேடை மீது ஏறிய தொண்டர் ஒருவர் அன்புமணி அருகே நெருங்கி செல்பி எடுக்க முயன்றார்.

இதனை கவனித்த அன்புமணி தனது கையால் செல்பி எடுக்க முயன்ற தொண்டர் என் கையை தட்டி செல்ஃபி எடுக்க விடாமல் தடுத்து விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அன்புக்கொடி தட்டி விடும் போது அந்தத் தொண்டர் செல்போனை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் அது கீழே விழவில்லை. இல்லை என்றால் அந்த செல்போன் கீழே விழுந்து சுக்குநூறாகி இருக்கும்.