தாலி கட்டுன பிறகு பொன்ன மாப்பிளை தூக்கனும்! விபரீத சடங்கால் மேடையில் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகளை, மணமகன் தூக்கும்போது கீழே விழும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக வருகிறது.


ஒவ்வொரு மனிதனுக்கும் மறக்க முடியாத நாள் பிறந்த நாளுக்கு அடுத்தபடியாக பிறந்த நாள் என்றே சொல்லலாம். பிறந்த நாளுக்கு வராத நண்பர்கள், உறவினர்கள் கூட திருமணத்திற்கு நிச்சயமாக வருவார்கள் (நிச்சயமாக என்ற வார்த்தையை நம்பித்தான் ஆகவேண்டும்). திருமண விழாவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், புகைப்படமும், வீடியோவும் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. 

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமேடையில் சடங்கு செய்யும் போது மணமகளை தூக்குகிறார் மணமகன். அப்போது சரியாக தூக்காததாலோ, அல்லது மணமகள் மிகவும் எடை அதிகமாக இருந்ததாலோ என்னவோ மணமகளை தவற விட்டு விட்டார்.

இதனால் நிலைதடுமாறி குப்புற கீழே விழுந்தார் மணமகள். இந்த காட்சிகள் அங்கிருந்த உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் கொஞ்ச நேரம் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.

பின்னர் ஒருவருக்கொருவர் எதார்த்தமாக பேசத் தொடங்கியதும் இயல்பு நிலைக்கு திரும்பினர். பின்னர் தொடர்ந்து திருமணத்திற்கு தேவையான சடங்குகள் நடைபெற்றது. கணவனால் மனைவி கைவிடப்பட்டு கீழே விழும் நேரலை காட்சிகள் வைரலாகி வருகின்றன. உலகத்திலேயே முதல் முறையாக கணவனால் மனைவி கைவிடப்படும் உண்மை வீடியோ இதுதான் என்றே கூறலாம்.