கணவன் பிறந்தநாள் விழாவில் விபரீதம்! அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினாரா நடிகை, எம்பி?

மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜஹான் மாத்திரைகள் சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜஹான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பஷிர்ஹட்தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் கடந்த ஞாயிறன்று தனது கணவர் நிகில் ஜெயினின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நுஷ்ரத் ஜஹான் திடீர் என்று மக்கம் அடைந்தார். சிறிது நேரத்திலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நுஷ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதை அறிந்த பொது மக்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒரு தவறனா தகவல் கசிந்துள்ளது. நுஷ்ரத் ஜஹான் அதிகப்படியான தூக்க மாத்திரையை எடுத்துக் கொண்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்த தகவலை அறிந்த நுஸ்ரத் ஜஹான் குடும்பத்தினர், வெளியான தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மேலும், நுஸ்ரத் ஜஹான் குடும்பத்தினர், சுவாசப்பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளார் என்றும் தற்போது நுஸ்ரத் ஜஹான் நலமுடன் உள்ளதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.