ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடக்காது! வானிலை மையம் நிம்மதி தகவல்!

தென் கிழக்கு வங்க கடலில் ஃபானி புயல் உருவாகி உள்ள நிலையில் அதன் நகர்வு மற்றும் தாக்கம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று உள்ளது .வட தமிழகத்தில் இருந்து 1250 கி.மீ தொலைவில் உள்ளது.ஃபானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். கடலுக்குள் காற்றின் வேகம் இருக்கும்.ஆனால் நிலப்பரப்பில் பெரிய அளவில் இருக்காது. தற்போதைய நிலவரப்படி கன மழைக்கான சாத்திய கூறுகள் குறைவு .

லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு. வட தமிழகம் அருகே 300 கி.மீ தொலைவில் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் கரையை கடக்க வாய்ப்பு இல்லை .(குறைவாக காணப்படுகிறது) கடந்த முன்னறிவிப்புக்கும் இந்த முன்னறிவிப்புக்கும் மாறுதல்கள் உள்ளது,எனவே மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் தரப்படும் .