அடுத்த நான்கு நாட்கள் தமிழகத்தில் வெரி ஹெவி ரெயின் தான்..! வெதர்மேன் சொல்லும் காரணங்கள்! என்ன தெரியுமா?

நமக்கு எல்லாம் ஒரு குட் நியூஸ் வரும் ஏப்ரல், 8,9-ஆம் தேதிகளில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார். அது மட்டுமா கொரோனாவின் கோரதாண்டவத்தினால் இருக்கும் மக்களுக்கு இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியாக அமையும் என நம்புகிறேன் என்று தனது ஃபேஸ்புக்கில் பக்கத்தில் பதிவும் ஈட்டுள்ளார்.


உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொடூர கொரோனாவினால் தமிழக மக்களுக்கும் மிகுந்த பயம் மற்றும் பதற்றத்துடன் ஒவ்வோரு நாட்களையும் கழிக்கின்றனர். 

 இந்த சூழ்நிலையில் தான் வெதர்மேன் ஒரு மகிழ்ச்சி தகவலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் ஏப்ரல், 8,9-ஆம் தேதிகள் வரையிலான 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மழை பொழியும் என்று தெரிவித்துள்ளார்.

 இன்று தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில் தென் தமிழகம் மற்றும் உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கன்னியாகுமரி, நெல்லை, வால்பாறை போன்ற பகுதிகளில் வெப்பசலனத்தினால் பகலில் வெய்யிலின் தாக்கமும் இரவு நேரங்களில் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்களில் அதிகபட்சமாக 35 மிமீ வரை மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் தஞ்சாவூர் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 6.30 மணியில் இருந்து ஒரு மணிநேரம் வரை மழை பெய்தது.

இதனை தொடந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடலோர பகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

weather report இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த செய்தி தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தியாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நற்செய்தியினை ஃபேஸ்புக்கில் பக்கத்தில் வெதர்மேன் பதிவும் ஈட்டுள்ளார்.