பருவ மழையே வருக வருக! தேதி குறித்தது வானிலை மையம்!

தென்மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் என்கிற தேதியை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை கூறியுள்ளது தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கை மேட். ஆம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்கிற தேதியை ஸ்கை மேட் தெரிவித்துள்ளது.

அதன்படி கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் நான்காம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று skymet நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்குவதற்கான அனைத்து சாதகமான கூறுகளும் காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக பொழியும் சாரல் மழை குறைவாகவே இருக்கும் என்று கூறி மக்களை வருத்தமடைய செய்துள்ளது வானிலை மையம்.

அதேபோல் இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவை விட குறைவாகவே இருக்கும் என்று கூறி குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது தனியார் வானிலை மையமான ஸ்கை மேட். இருந்தாலும் கூட ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்குவது என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சாதகமான ஒன்று என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.