லவ் ஜிகாத் தெரியும், கெளவ் ஜிகாத் தெரியுமா? அடுத்த பிஜேபி தலைவர் அதிரடி!

உத்திரப்பிரதேச மாநிலம் பாரான்பன்கியை சேர்ந்தவர் ரஞ்சித் பஹதூர் ஸ்வத்ஸ்வா.


மற்ற பிஜேபி தலைவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவ்வப்போது அதிரடி இனவெறி கருத்துகளை அள்ளி விடுபவர்.சமீபத்தில் கூட பசுக்கள் நன் தாயைப் போன்றவை.அவை இறந்துவிட்டால் புதைக்கக் கூடாது.எரியூட்ட வேண்டும்.அதற்காக அரசு தனி சுடுகாடுகள் அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து யுபி சிஎம் யோகி ஆதித்ய நாத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர்.இவர் இப்போது ஒரு புதிய முத்தை உதிர்த்து இருக்கிறார்.

நம்வீட்டுப் பெண்களை இஸ்லாமியர்கள் காதலித்து திருமணம் செய்வதை லவ் ஜிகாத் என்று சொல்லி எதிர்ப்பது போல கோமாதாவை நமது கோமாதாக்கள் இஸ்லாமியர் வீடுகளில் வளர்ப்பதும் லவ் ஜிகாதான்.அதை நாம் அனுமதிக்கக் கூடாது.அதைத் தடை செய்ய வேண்டும்.என்ன விலை கொடுத்தாவது இஸ்லாமியர் வீடுகளில் வளர்க்கப்படும் பசுக்களை மீட்க வேண்டும்.பசுக்கள் இந்துக்கள், அவசியம் பசுக்களை வளர்க்க வேண்டுமானால் அவர்கள் மதம்மாறி இந்துக்களாகட்டும் என்று பேசி இருக்கிறார்.

அத்துடன்  இஸ்லாமியர்கள் அவசியம் தேவை என்றால் ஆடு வளர்க்கட்டும்,அவர்கள் பசுக்களை வளர்க்கக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்.இப்படி மாடுகளை மதம் மாற்றி அதிரடி செய்திருக்கும் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சவாவுக்கு சிந்தனைத் திறனில் சற்றும் குறையாத யோகி ஆதித்யநாத் உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருப்பதால் இதெல்லாம் சட்டமாகவே அறிவிக்கப் பட்டாலும் ஆச்சரியமில்லை.

ஸ்ரீ வத்சவாவின் கருத்துப்படி பசுக்கள் எல்லாம் இந்துக்கள் என்றால் ஆஸ்திரேலியா,நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாழும் கிறிஸ்தவ மனிதர்களை விட இந்து பசுக்களும்,அவைகளின் கணவர்களும் பிள்ளைகளும் என்னிக்கையில் அதிகமாச்சே என்று கேட்டு விடாதீர்கள்.