சிபிஐ விசாரணை வேண்டாம்! காமுகர்களை சுட்டுத்தள்ளுங்க! மக்கள் ஆவேசம்!

எந்த ஒரு கொடூரமான குற்றம் என்றாலும் சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று போராடுவதுதான் மக்களின் வழக்கம். ஆனால், முதன்முறையாக சி.பி.ஐ. விசாரணை வேண்டவே வேண்டாம்... வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசமே இருக்கட்டும், அப்போதுதான் சுட்டுக்கொல்லமுடியும் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.


இப்போது ஜாஃபர்சேட் சி.பி.சி.ஐ.டி. தலைவராக பொறுப்புக்கு வந்திருப்பதால் நிச்சயம் குற்றவாளிகளை போட்டுத்தள்ளிவிடுவார், அதுவரை சி.பி.ஐ. வசம் கேஸை ஒப்படைக்க வேண்டாம் என்று மக்கள் மட்டுமல்ல,போலீஸில் ஒரு பிரிவினரும் கோரிக்கை வைக்கிறார்கள். ஏனென்றால் சி.பி.ஐ.க்கு கேஸ் போனால் அது உருப்படாது, எந்த நடவடிக்கையும் இருக்காது என்பதுதான். 

ஏனென்றால் சமீபத்தில்கூட பல்வேறு வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டன. விஷ்ணுபிரியா வழக்கு தொடங்கி முதல்வர் சம்பந்தி வழக்கு வரையிலும் எதிலும் நீதியும் கிடைத்ததில்லை, நியாயமும் கிடைத்ததில்லை.

வழக்கை தள்ளிப்போடுவதற்கும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கும்தான் சி.பி.ஐ. பயன்படுகிறது. ஏனென்றால் சி.பி.ஐ. அமைப்பில் போதுமான ஆட்கள் கிடையாது. விசாரணை நடத்தவும், தண்டனை வாங்கித்தரவும் வழிகள் கிடையாது. அதனால்தான் சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கை மாற்றிய 5 மணி நேரத்தில் சி.பி.ஐ.க்கு விஷயத்தை மாற்றி பொள்ளாச்சி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதல்வர்.

விஷயம் தள்ளிப்போகக்கூடாது என்று சி.பி.ஐ.க்கு இன்று மாற்றம் செய்து ஆணை பிறக்கப்பட்டுவிட்டது. இனிமேல் எப்போது சி.பி.ஐ. இதனை ஏற்றுக்கொண்டு ஆட்களை அனுப்பி விசாரித்து, உருப்பட்ட மாதிரிதான்...