உதித் சூர்யாவப் போல எத்தனை பேர் கோல்மால் பண்ணி நீட் ஜெயிச்சாங்களோ? வெளியாகும் அதிர வைக்கும் தகவல்கள்!

அனிதாவின் மரணம் மத்திய அரசை கொஞ்சமும் யோசிக்க வைக்கவே இல்லை. தமிழக அரசும் நீட் விலக்குக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் தமிழர்களைத்தவிர யார் யாரோ இடம் பிடித்துவருகிறார்கள்.


இந்த நிலையில் நீட் தேர்வு நடக்கும்போது மாணவ, மாணவியரின் ஜடை, உடை, செருப்பு, வாட்ச் என்று இஞ்ச் இஞ்சாக சோதனை செய்யும் அதிகாரிகள் தமிழகத்தில் மட்டும்தான் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் வெளி மாநிலங்களில் ஆளையே மாற்றி எழுதுகிறார்கள்.

ஆம், ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் உதித் சூர்யா என்ற மாணவர். இரண்டு முறை தேர்வு எழுதி ஜெயிக்க முடியாத நிலையில், மூன்றாவது முறையாக மும்பையில் தேர்வெழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் உதித் சூர்யா.

இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் உதித் சூர்யாவின் பெற்றோரும் மருத்துவர்களாம். 

மகனுக்கு இப்படி மோசடி வழியைக் காட்டிய உதித் சூர்யாவின் அப்பா மட்டும் எப்படி நேர் வழியில் தேர்வெழுதி மருத்துவராக வந்திருக்க முடியும். அதனால் முதலில் உதித் சூரியாவின் அப்பா எங்கு படித்தார், எப்படி சேர்ந்தார் என்று ஆய்வு செய்யவேண்டியது அவசியம்.

ஆள் மாறாட்டம் தவிர வேறு எந்த வகையில் எல்லாம் தில்லுமுல்லுகள் நடக்கிறது என்பதும் அம்பலபடுத்த வேண்டும். ஏனென்றால், தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வு இத்தனை சீரியஸாக நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் காப்பியடித்தே தேர்வில் பாஸ் செய்துவிடுகிறார்கள்.

இனியாவது நீட்டை தூங்குங்கப்பா.