ஒரு ஜாதிப் பெண்களை இழிவாக பேசி வாட்ஸ்அப் வீடியோ! குண்டாஸ் போட்டு ஆப்படித்த போலீஸ்!

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசிய வாலிபர். தமிழகத்திலேயே முதல்முறையாக குண்டர் சட்டத்தில் கைது.


விருத்தாச்சலம் மணலூர் சிறுத்தை சிவகுமார் என்ற வாலிபர் டிக் டாக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் அந்த சமுக இன பெண்களையும் தகாத முறையில் திட்டி பதிவேற்றம் செய்திருந்தார். இதனால் விருத்தாசலம் பகுதியில் இரு சமூகத்துக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.

விரைந்து செயல்பட்ட விருத்தாச்சலம் காவல்துறையினர் சிறுத்தை சிவக்குமாரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை திட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டால் அவர்களை குண்டர்  சட்டத்தில் கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்திலேயே முதல் முறையாக  சிறுத்தை சிவகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

 கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன்  பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சிறுத்தை சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி விருத்தாசலம் காவல் துறையினர் சிறுத்தை சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.