தமிழ்நாட்டில்தான் தண்ணீர் திருட்டு அதிகமாம்! இதோ ஓர் அதிர்ச்சி தகவல்!

தண்ணீருக்கு என்றைக்கு விலை வைக்கப்பட்டதோ, அன்றே தண்ணீரைக் கொள்ளையடிக்கும் நிலைக்கு பலரும் வந்துவிட்டார்கள்.


இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மினரல் வாட்டர் நிறுவனங்கள் அதிகம். ஆம், உரிமம் பெற்று தமிழ்நாட்டில் இயங்கும் மினரல் வாட்டர் ஆலைகளின் எண்ணிக்கை 3,299. மினரல் வாட்டர் ஆலைகள் நிலத்தடி நீரை எடுப்பதற்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ள இடங்களின் எண்ணிக்கை 6,881.

இவற்றில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கும் மையங்களில், 1,186 இடங்களில் அளவுக்கு அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த 1,186 இடங்களில் 462 இடங்கள் தமிழகத்தில் உள்ளன என்பதுதான் வேதனை.

அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்படும் பட்டியலிலும் தமிழகத்துக்கே முதலிடம். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 500 மினரல் வாட்டர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் ஒவ்வொன்றும், ஒருமணி நேரத்துக்கு 3000 லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கின்றன.

சென்னையில் சராசரியாக 7 மணிநேரத்தில் 42,000 லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. ஒருநாளைக்கு 1,26,000 லிட்டர் நிலத்தடி நீர் சென்னையில் உறிஞ்சப்படுகிறது. சென்னையைச் சுற்றியுள்ள 500 மினரல் வாட்டர் ஆலைகளும் சேர்ந்து நாளொன்றுக்கு சுமார் 2.1 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன.

ஒரு நாளில் தமிழகத்தில் உள்ள 3,299 ஆலைகள் எடுக்கும் நிலத்தடி நீரின் அளவு சராசரியாக 20,16,000 கோடி லிட்டர். தமிழ்நாட்டில் அனுமதியின்றி 10,000க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்படுகின்றன. சுமார் 80,64,000 கோடி லிட்டர் தண்ணீர் தினசரி திருடப்படுகிறது.

ஒருநாளில் மட்டும் தண்ணீர் திருட்டின் மூலம் 12,09,60,000 கோடி ரூபாய் வசூலாகிறது. மாதம்?? ஆண்டொன்றுக்கு ? கணக்குப் போட்டுப் பாருங்கள். தலையே சுற்றிவிடும். ஆனால், இதைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் கட்சி விஷயங்களில் கவனம் செலுத்துகிறது தமிழக அரசு.