IT என்ஜினியர் மனைவி வாயில் சபாநாயகர் டிரைவர் செய்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீஸ்!

குடிநீா் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையில் மென்பொறியாளா் மனைவியை கத்தியால் வெட்டிய தமிழக சபாநாயகா் காா் டிரைவா் கைது.


காஞ்சிபுரம் மாவட்டம்  அனகாபுத்தூா் நகராட்சியில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அமரேசன் நகரில் பாதுஹா அப்பாா்ட்மெண்டில் வசிக்கும் மென்பொறியாளா் மோகன் என்பவா்  நேற்று இரவு 10.30 மணிக்கு  சம்ப்பிலிருந்து மின்மோட்டாா் மூலம் தனது வீட்டு டேங்கிற்கு தண்ணீா் ஏற்றிகொண்டிருந்தாா்.

அப்போது அதே பிளாட்டில் வசிக்கும் ஐயப்பன் @ ஆதிமூலம் கிருஷ்ணன்(36) என்பவா் வந்து மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டாா்.அப்போது மோகனை ஐயப்பன் அடித்து உதைத்தாா்.உடனே மோகனின் மனைவி சுபாசினி(28) கணவருக்கு ஆதரவாக வந்து ஐயப்பனிடம் வாக்குவாதம் செய்தாா்.உடனே ஐயப்பன் நான் யாா் என்று தெரியாமல் பேசாதே.நான் நினைத்தால் உங்கள் அனைவரையும் கூண்டோடு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினாராம்.

உடனே சுபாசினி,ஐயப்பன் சா்ட்டை பிடித்து இழுத்து உன்னாள் முடிந்ததை செய்துபாா் என்று சவால் விட்டாராம்.உடனே ஐயப்பன் தனது  வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சுபாசினியின் வலது தாடையில் வெட்டினாா்.உடனே அதே அப்பாா்டமெண்டில் உள்ளவா்கள் வந்து சண்டையை விலக்கினா்.சுபாசினி திருநீா்மலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இது சம்பந்தமாக சங்கா்நகா் போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.ஐயப்பன் தமிழக சபாநாயகா் தனபாலின் காா் டிரைவா் என்று கூறப்படுகிறது.அதோடு தலைமை செயலக அரசு பணியாளா் சங்கத்தை சோ்ந்தவா்.