குடிநீர் கேன் விலை 75 ரூபாயாகிறதா..? எடப்பாடி சார் என்ன செய்றீங்க.

இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் ஒன்றாவது இடம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இந்தியாவிலேயே அசுத்தமான குடிநீர் விநியோகத்தில் இரண்டாவது இடம் என்ற சாதனையும் சென்னைக்குத்தான் என்பதை சொல்ல மறக்கிறார்.


ஆம், அரசு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் மனிதர்கள் குடிப்பதற்கான தகுதியில் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதேநேரம் தனியார் வழங்கும் குடிநீர் கேன்களிலும் நல்ல தண்ணீர் இல்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல்.

ஆம், தண்ணீரில் தேவைக்கும் அதிகமாக தாதுக்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கல்லீரல் செயலிழப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக குளறுபடி, பித்தப்பையில் கற்கள் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு தண்ணீர் கேன்களே காரணமாக இருக்கிறது.

ஆனாலும், 30 ரூபாய்க்கு விற்பனையாகிவந்த குடிநீர் கேன்களின் விலை இப்போது 75 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் சொல்கிறார்கள். 

இந்த நிலையில் சாதாரண பொதுமக்கள் என்னதான் செய்ய வேண்டும்..? குடிநீர் வாரியம் வழங்கும் நீரைப் பிடித்து கொதிக்க வைத்து, ஆறிய தண்ணீரை குடிக்கவேண்டும். அதுதான் ஆபத்து குறைந்த வழிமுறை என்று சொல்லப்படுகிறது.