தட்டில் இருந்து தானாக ஊர்ந்து சென்ற லெக் பீஸ் இறைச்சி! அதிர்ச்சி தரும் வீடியோ!

வாஷிங்டன்: உணவுத் தட்டில் இருந்து மெல்ல ஊர்ந்து சென்ற இறைச்சியை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஆம், அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியை சேர்ந்த Rie Phillips என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ இதுவரை 40 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

அப்படி அந்த வீடியோவில் என்ன உள்ளது என்று கேட்கிறீர்களா? ஆம், உணவுத் தட்டு ஒன்றில் இறைச்சியை வெட்டி ஒருவர் வைத்துள்ளார். அதன் அருகே மற்றொரு தட்டியில் பச்சை நிற இறைச்சியும் உள்ளது.

இந்நிலையில், திடீரென தட்டில் இருக்கும் இறைச்சி அப்படியே எழுந்து நகர தொடங்குகிறது. சிறிது தொலைவு சென்றுவிட்டு, மீண்டும் தட்டில் வந்து, அது விழுகிறது. இதைப் பார்த்து ஒரு பெண் அலறி ஓடுகிறார். இது பார்க்கும் பலரையும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. 

ஒருசிலர் இதுபற்றி கூறுகையில், இதில் பெரிய மர்மம் ஒன்றும் இல்லை. அந்த இறைச்சி உயிருடன் தோலுரிக்கப்பட்ட தவளையாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இப்படி உயிருடனே விலங்குகளை தோலுரித்துவிட்டு, இறைச்சி தயாரித்து, அதனை சமைப்பது வழக்கம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.