வாஷிங்டன்: 12 வயது சிறுமி ஒருவருக்கு, வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.
ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருந்த சிறுமி..! தேடி வந்த இதயம் தானம்..! கிறிஸ்துமஸ் சமயத்தில் அரங்கேறிய அதிசயம்! நெகிழும் உறவுகள்!

பிரிட்டனில் உள்ள துர்ஹாம் பகுதியை சேர்ந்தவர் கைலீக் லிவெலின். 12 வயதான இந்த சிறுமிக்கு 3 மாதங்களுக்கு முன்பாக, ஒரு அரிய வகை நோய் ஏற்பட்டதை, டாக்டர்கள் கண்டறிந்தனர். அதாவது, இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் திடீரென தடிமனாகி விடுவதால், அவற்றால் போதுமான ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், சிறுமிக்கு பெரும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மாற்று இதயம் பொருத்த மருத்துவர்கள் தீர்மானித்தனர். ஆனால், இதயம் தானம் தர யாரும் கிடைக்காததால், சிறுமி, கடந்த ஒன்றரை மாதமாக கோமா நிலையிலேயே இருந்தார்.
இதன்படி, அவருக்கு ஒருவரது இதயம் தானமாகக் கிடைத்தது. அதனை வெற்றிகரமாக மருத்துவர்கள், சிறுமியின் உடலில் பொருத்தினர். தற்போது கைலீக், சுயநினைவுக்கு திரும்பியுள்ளார். மீண்டும் மறுபிறப்பு எடுத்துள்ள சிறுமி கைலீக், கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். அவரது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் உடல் உறுப்பு தானம் பெற வேண்டுமெனில், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அத்தகைய கட்டுப்பாட்டையும் மீறி, சிறுமிக்கு இதயம், குறுகிய நாளில் தானமாகக் கிடைத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.