ஒரு நிமிடத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளம்! வாய் பிளக்க வைக்கும் தொழில் அதிபர்களின் சம்பளம்!

வாஷிங்டன்: வால்மார்ட் உரிமையாளர், ஒரு நிமிடத்திற்கு ரூ.50 லட்சம் வரை சம்பாதிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தற்போது மந்தமடைந்துள்ளது. இதனால், சர்வதேச பொருளாதார நிலை இறங்குமுகத்தில் உள்ளது. ஆனால், சில பணக்காரர்களின் காட்டில் மட்டும வருமானம் எந்த குறைவும் இல்லாமல் செழிப்பாகக் காணப்படுகிறது.

இதன்படி, சர்வதேச அளவில் 15 பெரும் பணக்காரர்களின் குடும்பங்கள்,  சுமார் 1.4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான செல்வத்தைக் கையில் கொண்டுள்ளன. இந்த பட்டியலில்,  வால்மார்ட் நிறுவன உரிமையாளர் வால்டன் முதலிடத்தில் உள்ளார். ஆம். அவர்  ஒரு நிமிடத்திற்கு சுமார் 70,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்) சம்பாதிக்கிறாராம். இதுவே, ஒரு மணி நேரத்திற்கு, 4 மில்லியன் டாலர்களாகவும், ஒரு நாளைக்கு 100 மில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இதன்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில், கடந்த 2018 முதலாக, வால்டன்தான் முதலிடத்தில் உள்ளார். 

இதேபோல, உலகின் பிரபலமான கேண்டி மிட்டாய் நிறுவனர் மார்ஸ், அதிகம் சம்பாதிக்கும் தொழிலதிபர் பட்டியலில், 2வது இடத்தில் உள்ளார். அவரது ஆண்டு வருமானம், கடந்த 2018ம் ஆண்டு, 127 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 3வது இடத்தில் உள்ள Kochs நிறுவன அதிபர் 125 பில்லியன் டாலர் ஆண்டு வருமானம் ஈட்டியுள்ளார். இதற்கடுத்தப்படியாக, சவூதி அரச குடும்பம், ஃபிரான்சை சேர்ந்த Hermes, Wertheimer family உள்ளிட்டோரும் உள்ளனர். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியும் இடம்பிடித்துள்ளார். அவரது ஆண்டு வருமானம் 50 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை பாதித்திருந்தாலும், இந்த நபர்களின் வருமானம் எந்த பாதிப்பும் இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.