பிளிப்கார்ட் நிறுவனத்தை அலேக் செய்தது வால்மார்ட்!

பிளிப்கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியது வால்மார்ட்.


இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருகாலத்தில் சில்லரை வியாபாரிகள் பெருமளவில் போராட்டங்களை நடத்திய காலம் உண்டு. ரிலையன்ஸ் ரீடெய்ல் . கேஎஃப்சி போன்ற கார்பரேட் நிறுவனங்கள் வந்த பிறகு கிராம மற்றும் நகர அளவிலான சில்லரை வியாபாரிகள் பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்த பன்னாட்டு முதலீட்டு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற சமயத்தில். முக்கியமாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வால்மார்ட் சில்லறை வர்த்தக நிறுவனத்தை இந்தியாவில் தொடங்க அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக அனைத்து தரப்பு வர்த்தக துறையினர் சார்பில் கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியது. 

சில காலங்களுக்கு பிறகு. அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிசையாக தங்களது நெட்வொர்க்கிங் கிளைகளை சிறிது சிறிதாக இந்தியாவில் தொடங்கினாலும். இதுவரை நேரடியாக இந்திய வணிக துறையில் கால் தடம் பதிக்காமல் இருந்து வருகிறது வால்மார்ட். இந்நிலையில். இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இயங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான நிஞ்சாகார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது வால்மார்ட்.

அதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக நிறுவனமாக வால்மார்ட் மாறியுள்ளது. பிளிப்கார்ட்டின் சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில் 77 சதவீதப் பங்குகளை சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வால்மார்ட் வாங்கியுள்ளது. நிஞ்சாகார்ட் நிறுவனத்துக்கு நாடுமுழுவதும் பல இடங்களில் நேரடி விற்பனை நிறுவனங்கள் உள்ளன.

பண்ணை பசுமை விற்பனை என்ற வர்த்தக இலக்கை கொண்டு நிஞ்சாகார்ட் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனமாக உள்ள வால்மார்ட். பிளிப்கார்ட் நிறுவனத்தை 2018 ஆம் ஆண்டில் கையகப்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் தான் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் ஒப்பந்தம் என்று கூறுகின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் வால்மார்ட் குழுமத்தில் இணைந்த பிறகு பிளிப்கார்ட் மற்றும் ஃபோன்பே நிறுவனங்கள் தங்களது முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் 2018-19 நிதியாண்டில் மட்டும் 43,615 கோடி வருவாயைப் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மணியன் கலியமூர்த்தி