ஸ்டாலின் கட்டளைக்காக காத்திருக்கிறேன்! படுத்தேவிட்டாரய்யா வைகோ! எம்பி பதவிக்கா?

இனி ஆயுள் முழுவதும் ஸ்டாலினுக்கு துணை நிற்கப் போவதாக வும் ஸ்டாலின் கட்டளையிட்டால் மும்மொழிக் கொள்கையை தீயிட்டு எரிக்க தயாராக இருப்பதாகவும் கூறி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி உள்ளார் வைகோ.


திமுக தலைவர் கலைஞரின் 90 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா திமுக சார்பில் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது வைகோ கூறியதாவது:

ஒரு கண்ணில் இன்ப கண்ணீர், மறு கண்ணில் துன்பக் கண்ணீரோடு வந்திருக்கிறேன். திராவிட கட்சிகளோடு மோதி, பாஜக மூக்கு உடைபட்டுள்ளது.

மத்திய அரசு ஒருபோதும் இந்தி திணிப்பை கைவிடாது. கஸ்தூரிரங்கன் அறிக்கையை வீதி வீதியாக தீயிட்டு கொளுத்த நான் தயார். முக ஸ்டாலின் முடிவெடுக்க வேண்டும். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவிட்டேன். எஞ்சிய வாழ்வை ஸ்டாலினோடு. சேர்ந்து தான் பயணிப்பேன். அரசியல் அமைப்பு சட்டத்தை எரித்திருக்கிறேன்.

ஸ்டாலின் முடிவெடுத்து கட்டளையிட்டாள், கஸ்தூரிரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்த தயார். இவ்வாறு வைகோ பேசினார். 

அதாவது திமுக தலைவர் ஸ்டாலின் கட்டளைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காத்திருக்கிறாராம். மதிமுக எனும் ஓர் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் தான் இருப்பதையே மறந்து விட்டு வைகோ இப்படிப் பேசியுள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மதிமுக எனும் தனி இயக்கம் நடத்தி வரும் வைகோ எதற்காக ஸ்டாலின் கட்டளைக்காக காத்திருக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒருவேளை ராஜ்யசபா எம்பி பதவிக்காக திமுகவில் இணையவும் முடிவெடுத்து விட்டார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.