நாடு திரும்பும் எடப்பாடி! வரவேற்க தடல் புடல் ஏற்பாடு! மாற்றப்படும் அமைச்சரவை? திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்!

எடப்பாடி பழனிசாமி வெளிநாடுப் பயணம் மேற்கொண்ட நேரத்தில் விமான நிலையத்தில் குறைந்த அளவு நிர்வாகிகளே வழியனுப்பும் வைபவத்தில் கலந்துகொண்டனர். அதனை சரி செய்யும் வகையில் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டுவதற்கு அ.தி.மு.க. ஏற்பாடுகள் செய்துவருகிறது.


எடப்பாடியின் காலில் விழுந்து நல்ல பெயர் வாங்குவதற்கு ஏராளமான நிர்வாகிகள் தயாராக இருக்கிறார்கள். 10ம் தேதி அதிகாலை அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவார் என தெரியவந்துள்ளது.

எடப்பாடி வந்தவுடன் கொங்கு மண்டலத்திற்கு மட்டும் குறிப்பாக சேலம், கோவை பகுதிக்கு ஏராளமான அறிவிப்புகள் இருக்குமென தெரிகிறது. குறிப்பாக கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சேலத்திற்கு கொண்டு வருகிறாராம்.

அதேபோன்று இந்த மாதத்திலேயே அமைச்சரவை மாற்றம் உறுதியாக நிகழ இருக்கிறதாம். ஒரு பெண் அமைச்சரும், ஒரு தென் மாவட்ட அமைச்சரும் பதவியில் இருந்து எடுக்கப்பட்டு எடப்பாடியின் விசுவாசிகளுக்குப் பதவி கொடுக்கப்பட இருக்கிறதாம்.

மேலும், அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் விவகாரத்திலும் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்க இருக்கிறாராம். தனிப்பட்ட முறையில் ஒற்றைத் தலைவர் நான் மட்டும்தான் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் எடப்பாடியின் அதிரடிகள் இருக்கும் என்கிறார்கள்.