உருகிய கேப்டன்! கண் கலங்கிய டி.ஆர்! குறளரசன் திருமண திருப்பம்!

மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்கச் சென்ற டிஆர் இடம் கேப்டன் உருகியதால் அங்கு ஒரு உணர்ச்சி மயமான சூழல் உருவானது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரையுலகில் உள்ள அனைவருடனும் நெருக்கமான பழக்கம் கொண்டவர். ரஜினியாக இருந்தாலும் சரி கமலாக இருந்தாலும் சரி கேப்டன் என்று வந்துவிட்டால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார்கள். நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த சமயத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற கலை விழாவில் ரஜினி கமல் இருவரையும் ஒரே மேடையில் ஏற்றி அசத்தியவர் விஜயகாந்த்.

இதேபோல் திரையுலகில் முன்னணியில் உள்ள அனைவருடனும் விஜயகாந்த் நல்ல உறவைக் கொண்டிருந்தார். ஆனால் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு விஜயகாந்தின் திரையுலக தொடர்பு முற்றிலும் முறிந்து போனது. இந்த நிலையில் திரையுலகில் முன்னணியில் இருந்த இயக்குனர் டி ராஜேந்தர் கூட விஜயகாந்தை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் தனது மகன் குறளரசன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார் டி ராஜேந்தர். அப்போது டி ராஜேந்தர் வரவேற்று கேப்டன் வெகுவாக உபசரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டீஆரின் மூத்த மகன் சிம்பு மகள் இலக்கியா குறித்தும் கூட கேப்டன் விசாரித்துள்ளார். உடல்நிலை முடியாத சூழலிலும் கூட மிகவும் சிரமப்பட்டு டிஆரிடம் உருவியபடி நலம் விசாரித்துள்ளார் விஜயகாந்த்.

இதனைக் கேட்டு டி ராஜேந்தர் அந்த இடத்திலேயே கண்கலங்கி உள்ளார். பிறகு அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார் கேப்டன்.