வாலிபால் ஆட்டத்தின் போது இடைவேளை! ஓடி வந்து குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனை! நெகிழ வைக்கும் புகைப்படம்!

வாலிபால் வீராங்கனை ஒருவர் இடைவேளை நேரத்தில் ஓடிவந்து அவரது குழந்தைக்கு பாலூட்டிய உருக்கமான சம்வம் மிசோராமில் நடைபெற்றுள்ளது


மிசோராமில் மாநில அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் லால்வென்ட்லுயாங்கி என்ற வீராங்கனை கலந்து பங்கேற்றார். (பெயர் கொஞ்சம் படிப்பது கடினமாக இருக்கும் என்பதால் வீராங்கனை என்று படித்துக்கொள்வோம்). வாலிபால் போட்டியில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த வீராங்கனை வெற்றி இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இடைவெளி நேரம் வந்தது. இதையடுத்து ஓடிவந்த வீராங்கனை அங்கு உறவினரிடம் இருந்த தன்னுடைய 7 மாதக் குழந்தையை பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த குழந்தையின் பசியை தீர்க்க தாய்ப்பால் ஊட்டத் தொடங்கினார். பொதுவாக வெளியில் வரும் தாய்மார்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில், புட்டிப் பால் அல்லது பிஸ்கட் ஊட்டுவர்.

ஆனால் இந்த வீராங்கனை என்னதான் வேலை இருந்தாலும், குழந்தைக்கு தாய்ப்பால்தான் ஊட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை மிசோராம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தாய்ப்பால் அளிக்கும் அந்த வீராங்கணைக்கு தனது சல்யூட் என்றும் கூறியிருந்தார். 

தாய்மை தங்கள் பணிகளுக்கும், குறிக்கோளுக்கும் தடையாக மாறாது என்பதை நிரூபித்தவர்கள் டென்னிஸ் வீராங்கணைகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் சானியா மிர்ஸா.