டெல்லி: இந்தியாவை விட்டு ஓடிப் போகும் திட்டம் இல்லை என்று, வோடஃபோன் இந்தியா மறுத்துள்ளது.
Vodafone இந்தியாவில் இழுத்து மூடப்படுகிறதா? சற்று முன் வெளியான புதிய தகவல்!

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன், சமீபத்தில் ஐடியா செல்லுலர் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதற்காக, இந்திய தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் ரூ.28,309 கோடியை நிலுவை வைத்துள்ளது. இதுதவிர நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையில் கடந்த சில வாரங்களாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், வோடஃபோன் இந்தியாவை விட்டு ஏர்செல் போல கடையை மூடிவிட்டு வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வோடஃபோன் வாடிக்கையாளர்கள் பல கோடி பேர் கடும் பீதியடைந்துள்ளனர். தற்சமயம் இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் வோடஃபோன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டிய பணத்தை விரைவில் செலுத்துவோம் என்றும், இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் இல்லை, வழக்கம்போல வர்த்தகப் பணிகள் தொடரும் என்றும் வோடஃபோன் குறிப்பிட்டிருக்கிறது.