அடேங்கப்பா! திருமாவளவன் சொத்து மதிப்பு! சற்று முன் வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திருமாவளவன் வெளியிட்டுள்ள அவரது சொத்துக்களின் மதிப்பு கேட்போரை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராகவும் எம்எல்ஏவாகவும் எம்பி ஆகவும் இருந்தவர் திருமாவளவன். தற்போது சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இதனை முன்னிட்டு திருமாவளவன் தனது சொத்து பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். அதன்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மொத்த சொத்து மதிப்பு வெறும் 76 லட்சத்து 99 ஆயிரத்து 92 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அசையும் சொத்துக்களின் மதிப்பு 58 லட்சத்து 71 ஆயிரத்து 292 ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.

ரூபாய் 18 லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிற்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது திருமாவளவன் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு 76 லட்சத்து 50 ஆயிரத்து 741 ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த முறை அவர் தெரிவித்துள்ள சொத்துக்களின் மதிப்பை ஒப்பிடும்போது கடந்த முறையை காட்டிலும் வெறும் 48 ஆயிரம் ரூபாய் மட்டுமே சொத்துக்களின் மதிப்பு திருமாவளவனுக்கு உயர்ந்துள்ளது.

மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் வைத்திருக்கும் போது ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் திருமாவளவனின் சொத்து மதிப்பு வெறும் 76 லட்சம் ரூபாய் தான் என்று தகவல் வெளியாகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.