விசிகவுக்கு ஆந்திராவில் 6 தொகுதி! கேரளாவில் 3 தொகுதி! வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அதிர வைத்த திருமா!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில் போட்டியிடுகிறது.


இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று சென்னை  அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனி சின்னத்தில் போட்டி 

விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதேபோன்று ஆந்திராவில் ஆறு நாடாளுமன்ற தொகுதிகளிலும் கேரளாவில் 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து தனி சின்னத்தில் போட்டியிடுவதற்காக அறிவிக்கப்பட்டது. 

கேரளாவில் மாநிலத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது 

இடுக்கி (தனி) தொகுதியில் - மா.செல்வராஜ் 

கோட்டையம் - ஜீவன் கே.விஜயன் 

கொல்லம் - கே.ஆர்.மீனா

ஆந்திராவில் 6 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது 

குண்டூர் தொகுதி - நாக்கா ஜேக்கப் வித்யாசாகர்

சித்தூர் ( தனி) -பி டி எம் .சிவபிரசாத் 

விசாகப்பட்டினம் - ஜார்ஜ் பங்காரி

திருப்பதி (தனி) - முருகேசன் பிரபு

ராஜம்பெட் - பொந்தளபள்ளி சந்திர சேகர் 

கடப்பா - ராம்ஜி இம்மானுவேல்  போட்டியிடுகிறார்கள்