கலக்கல் ஆப்ஷன்களுடன் ரூ.7000 விலையில் VIVO 9! என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?

பல்வேறு சிறப்பான தொழில்நுட்பங்களுடன் vivo 9 வகை ஸ்மார்ட் போன் பாகிஸ்தானில் அறிமுகம் பாக்கிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


நீர்ப்புகா தொழில்நுட்பம் சிறப்பான தொழில் நுட்பத்துடன் 8 மெகா பிக்ஸல் கொண்ட பின்புற கேமரா, 5 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா, மேட் ஃபினிஷுடன் கூடிய பின்புற பேனல் 6.2 இரண்டு அங்குல hd டிஸ்ப்ளே 4,030 mAh திறன் உடைய பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த வகை போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கருப்பு மற்றும் தங்க நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போன்களுக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 18,990 ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 8100 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் 6990 ரூபாயிலிருந்து அவை கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

ஏற்கனவே குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் ஓப்போ செல்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் அந்த போன்களை ஒப்பிடுகையில் இந்த போன் ப்ரீமியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.