இரவு முழுவதும் குடித்துக் கொண்டே இருப்பேன்..! மயங்கி விழும் அளவிற்கு குடிப்பேன்! காரணம் அவள் தான்..! ஆனால்? விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி அனுபவம்!

சென்னை: மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன், என்று நடிகர் விஷ்ணு விஷால் ஒப்புக் கொண்டுள்ளார்.


தமிழ் சினிமா நடிகர்களில் வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியுள்ளவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது எஃப்ஐஆர் என்ற படத்திற்காக, புதிய சிக்ஸ்பேக் கெட்டப்பை வெளிப்படுத்தியுள்ளார். வாரணம் ஆயிரம் சூர்யாவைப் பார்த்து கற்றுக் கொண்டதாக, இந்த சிக்ஸ்பேக் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மட்டுமின்றி, மேலும் சில விசயங்களை விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார். ஆம், ஒருகாலத்தில் தீவிர மதுப்பழக்கத்தை பின்பற்றி வந்ததாகவும், அந்த அடிமை நிலையில் இருந்து பெரும் போராட்டங்களை மேற்கொண்டு, வெளியேறியதாகவும் விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

மனநல ரீதியாகவும் ,உடல்நல ரீதியாகவும் மதுப்பழக்கம் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இளைஞர்கள் கவனமாக இருக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.