நயன்தாரா விவகாரத்தில் விஷால் நடிக்கிறார்! போட்டுத் தாக்கும் வரலட்சுமி!

நயன்தாரா குறித்து ராதாரவி மிக மோசமாக விமர்சித்து பேசிய விவகாரத்தில் நடிகர் சங்கம் நடிப்பதாக கூறி விஷாலை ஒரு பிடி பிடித்து உள்ளார் வரலட்சுமி.


இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் தனது கருத்துக்களை தொடர்ச்சியாக வரலட்சுமி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் சங்கம் எப்போதுமே ஆணாதிக்கவாதிகளால் மட்டுமே நிர்வகிக்கப் பட்டு வருவதாக வரலட்சுமி கூறியுள்ளார். 

பெயருக்கு வேண்டுமானால் நடிகைகளையும் பெண்களையும் ஆதரிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் கூறிக்கொள்வார்கள். ஆனால் நடிகைகளுக்கோ பெண்களுக்கு ஆதரவாக எந்த செயல்பாட்டிலும் நடிகர் சங்கம் ஈடுபடாது என்று கூறி அதிர வைத்துள்ளார் வரலட்சுமி.

நடிகர் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் சினிமா துறையாக இருந்தாலும் சரி தங்களது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி பெண்களின் சுய மரியாதையை தூக்கி நிறுத்துவதற்காக எந்த செயலிலும் ஈடுபடுவது இல்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர் இருந்தாலும் பொதுச் செயலாளராக இருப்பவர் விஷால். செயல்பாடு என்று வந்துவிட்டால் நடிகர் சங்கம் விஷாலை சார்ந்துதான் இருக்கிறது.

எனவே நடிகர் சங்க நிர்வாகிகள் என்று பொத்தம் பொதுவாக வரலட்சுமி கூறி இருந்தாலும் அவர் கூறியிருப்பதை முழுக்க முழுக்க விஷாலை மனதில் வைத்துதான் என்று சினிமா துறையினர் பேசிக்கொள்கின்றனர். ஏனென்றால் ராதாரவி விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டவர் விஷால் மட்டுமே.