ஆண் நண்பர்கள்! போதை! செ**ஸ்! புகைப்படம்! ரூ.60 லட்சம்! கதறும் இளம் பெண்! அதிர வைக்கும் காரணம்!

விசாகப்பட்டினம்: தூக்க மாத்திரை கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நண்பர்கள் வழியாக, ஒரு ஆண் கூட நெருங்கிப் பழகியுள்ளார். அந்த நபர் இளம்பெண் கூட உள்ள நட்பை பாலியல் ரீதியாக பயன்படுத்த தீர்மானித்துள்ளார். இதன்படி, இளம்பெண் கணவர் இல்லாமல் ஒருநாள் நண்பர்களுடன் வெளியில் சென்றபோது, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளனர்.

இதில் சுயநினைவை இழந்த பெண்ணை, பாலியல் வல்லுறவு செய்த அந்த நபர், அப்பெண்ணை ஆபாசமாகவும் புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை காட்டி பெண்ணிடம் இருந்து ரூ.60 லட்சம் பணத்தை மிரட்டி வாங்கியுள்ளார். இந்த பணத்தை, அந்த நபர் அவரது தந்தையின் வங்கிக் கணக்கிற்கு டெபாசிட் செய்ய சொல்லியுள்ளார். இதன்படியே பெண்ணின் குடும்பத்தினர் செய்தாலும், மேன்மேலும் பணம் கேட்டு மிரட்டப்பட்டதால், வேறு வழியின்றி இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.  

இதன்படி, விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, பெண்ணை மிரட்டி வரும் நபரையும், அவரது தந்தையையும் கைது செய்ய முயன்றனர். இதில், அந்த இளைஞர் தலைமறைவான நிலையில், அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.