மனிதபாப்பிலோமா வைரஸ்! உடல் உறவு மூலமாக பரவும் கொடுமையான புற்று நோய்!

உடலுறவு கொள்ளும்போது சில வைரஸ்களால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.


உடலுறவு கொள்ளும்போது பரவக்கூடிய வைரஸ் மனிதபாப்பிலோமா வைரஸ் (Human papilloma Virus - HPV) இந்த வைரஸ் உடலுறவில் ஈடுபடும்போது தொற்றுக்கள் மற்றும் குறிப்பிட்ட வகை புற்றுநோய் ஏற்படுத்துகிறது. மனிதபாப்பிலோமா வைரஸ் அசாதாரண சூழ்நிலையை கர்ப்பப்பையில் ஏற்படுத்தும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இதை எளிதில் கண்டறிய முடியாது. மருத்துவ பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க இயலும்.

மாதவிடாய் நின்ற பிறகும் ஒரு பெண்ணிற்கு ரத்த போக்கு ஏற்பட்டால் அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆசன வாயில் வலி, மலம் கழிக்கும்போது சிரமம் மற்றும் இரத்தக் கசிவு போன்றவை ஆசன வாய் புற்றுநோயின் அறிகுறிகளாகும். காரணம் ஆசனவாய் புற்றுநோய்க்கும், மனிதபாப்பிலோமா வைரசுக்கும் தொடர்பு உள்ளது.

இதை அறுவை சிகிச்சை, கதிரியக்கம் மற்றும் ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறது. பெண் இனப்பெருக்க உறுப்புகளில் வீரியமிக்க செல்கள் உருவாகும்போது அது யோனி புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இதன் அறிகுறி ரத்தக்கசிவு ஏற்படுவது. மனிதபாப்பிலோமா வைரஸ் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

ஆண்குறி சிவந்திருந்தாலும், புண், கட்டிகள் மற்றும் ரத்தக் கசிவுகள் வந்தாலும் உடலுறவு மூலம் மனிதபாப்பிலோமா வைரஸ் புற்றுநோய் ஏற்படுத்தும். வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்றுநோய் இருந்தால் உணவை விழுங்கும்போது வலியை உண்டாக்கும். திடீர் உடல் எடை குறைதல், தொண்டைப்புண் போன்றவையும் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

உடலுறவு மூலம் புற்றுநோய் வராமல் தடுக்க மனிதபாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இது வாய், கர்ப்பப்பை மற்றும் ஆசன வாய் புற்றுநோயின் அபாத்தை குறைக்கும்.