விரைவில் அறிமுகம் ஆகிறது அமுல் ஒட்டகப்பால்! ஆனால்! எச்சரிக்கும் டாக்டர்கள்!

சமீபத்தில் அமுல் நிறுவனம் ஒட்டகப்பால் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.


நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது என்று ஒட்டகப்பால் விற்பனைக்கு அனுப்ப இருக்கும் நிலையில், ஒட்டகப்பால் குடிக்க வேண்டாம் என்று இங்கிலாந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்குச் செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள் ஒட்டகப் பாலை அருந்த வேண்டாம் என்று அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகளின் கறந்த பாலில் இருந்து மெர்ஸ் எனப்படும் புதிய வைரஸ் பரவுவதாக வந்த தகவலையடுத்து சவுதி அரேபியா செல்லும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒட்டகப் பாலை அப்படியே அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2012 முதல் 2 ஆயிரத்து 500 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 845 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த நோய் அதிவிரைவில் பரவும் தன்மை கொண்டது என்பதால் எச்சரிக்கை செய்துள்ளது இங்கிலாந்து.

அப்படின்னா, நம்ம நாட்டுல ஆபத்து இல்லையோ?