16 வயதில் 50 ஆசனங்கள்! விருதுநகர் மாணவி உலக சாதனை!

விருதுநகரில் 10 ஆம் வகுப்பு மாணவி கண்ணாடி டம்ளரில் பாதி தண்ணீரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் 50 வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை புரிந்து அசத்தியுள்ளார்.


விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி சக்தி ஷிவானி, யோகா பயிற்சி மீது மிகுந்த ஆர்வம் உடையவர். ஏற்கனவே கடந்த ஆண்டு யோகா மூலம், யுனிவர்செல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார் .

இதனைத் தொடர்ந்து யோகா மீது அதீத ஆர்வம் கொண்ட மாணவி ஷிவானி, பாதி நீர் நிரப்ப‌ப்பட்ட கண்ணாடி டம்ளரில் எரியும் மெழுகுவர்த்தியுடன் 50 வகையான யோகாசனங்களை செய்து அசத்தினார். இதனை உலக சாதனையாக பாராட்டி சான்றிதழ் அளித்து கவுரவித்த பின்பு  ,நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார்,

மாணவிக்கு உல சாதனையாக பதிவு செய்து கொண்டனர். இந்த வயதில் உலக சாதனை படைத்த மாணவிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.