விருதுநகரில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி முஜிதா மீன் தொட்டிக்குள்ளாக நீருக்குள் 8 நிமிடம் தம்கட்டி இருந்து மிக கடினமான கண்ட பெருண்ட யோகா ஆசனத்தை செய்து சாதனை படைத்துள்ளார்.
1 அடி அகலம்! 3 அடி நீளம்! மீன் தொட்டிக்குள் 8 நிமிடம் யோகா செய்த 9 வயது முஜிதா! மெய்சிலிர்க்க வைத்த விருதுநகர் சிறுமி!

விருதுநகரை சேர்ந்த கோவிந்த ராஜன் மற்றும் பார்வதி தம்பதியின் மகள் முஜிதா 4 ஆம் வகுப்பு படித்து வரும் 9 வயதாகிய சிறுமி முஜிதா சிறு வயது முதலாக விளையாட்டில் ஆர்வமுள்ளவர்.
லிம்கா வெர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்பதில் சிறுமி முஜிதா சாதனை செய்துள்ளார், அதாவது 21 இன்ச் நீளமும் , 1 அடி அகலமும் கொண்ட மீன் தொட்டிக்குள்ளாக நீரை நிரப்பி, அந்த தொட்டிக்குள்ளாக சிறுமி முஜிதா கிட்ட தட்ட 8 நிமிடங்கள் மூச்சை அடக்கி கண்ட பெருண்ட என சொல்லக்கூடிய மிக கடினமான ஆசனத்தை செய்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து 9 வயதே ஆன சிறுமி இந்த சாதனையை படைத்துள்ளது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் முஜிதாவிற்க்கு பாராட்டு தெர்வித்து வருகின்றனர். மேலும்.பள்ளி பருவத்தில் முஜிதா இந்த சாதனை மூலமாக தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார், மேலும் அவரது சாதனைகள் இன்னமும் தொடர் வாழ்த்துகள்.குவிந்து வருகிறது.