கரு கலைக்க சென்ற பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த டாக்டர்கள்! விருதை அரசு மருத்துவமனையில் விபரீதம்!

விருதுநகர் அருகில் கருகலைப்பு செய்ய சென்ற பெண்ணிற்கு வில்லங்கமான ஆபரேஷன் செய்த அரசு மருத்துவமனை , ஆளை விட்டால் போதும் என அலறி அடித்து ஓட்டம் பிடித்த பெண்.


திருமங்கலம் அருகே  மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆசை - புனிதா இருவருக்கும் திருமணமாகி  ஏற்கனவே ஆண் பெண் என தலா 2 வீதம், 4 குழந்தைகள் இருக்கின்றனர்.இந்த நிலையில் 5 ஆவது முறையாக கர்ப்பமாகியுள்ளார் புனிதா.

இந்த நிலையில் புதிதாக உருவான கருவை கலைக்க நினைத்த புனிதா மதுரை அரசு மருத்துவ மனைக்கு செல்ல அறிவுறுத்தபட்டிருந்த போதும், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு, முதலில் கரு கலைப்பு செய்து விட்டு பின்னர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதாக கூறப்பட்டது.

ஆபரேசன் முடிந்து 8 நாட்கள் சிகிச்சை பெற்ற புனிதா வீடு திரும்பிய சில நாட்களில் தீராத வயிற்று வலியால் அவதியுற்றார்.இதனை அடுத்து ஸ்கேன் செய்து பார்த்த போது புனிதா கர்ப்பத்தில் குழந்தை இருப்பது உறுதியானதால் அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக மருத்துவரை அணுகியதில் அவருக்கு கருகலைப்புக்கு முன்னதாகவே குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதற்கிடையில் மீண்டும் ஆபரேஷன் மூலம்.தவறை சரி செய்துகொள்ள பல முறை அழைத்தும் புனிதா அசரவில்லை, மேலும் வீட்டிற்க்கு ஆம்புலண்ஸ் அனுப்பி அழைத்தும் சிக்காத புனிதா தனியார் மருத்துவ மனையிலேயே சிகிச்சை எடுத்துகொள்வதாக தலை தெறிக்க ஓட்டம் பிடித்து விட்டாராம்.