அதிமுக பிரமுகரை கொத்துக் கறி போட்ட கூலிப்படை! விருதுநகர் பயங்கரம்! அதிர்ச்சி சிசிடிவி காட்சி உள்ளே!

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் நள்ளிரவில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன், இவர் அதிமுகவில் மாணவரணி அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தனிமையில் இருக்கும்போது வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டு சண்முகவேல் ராஜன் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களிடமிருந்து சண்முகவேல் ராஜன் தப்பிக்க முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அவர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர். இதனையடுத்து பலத்த காயமடைந்த சண்முகவேல் ராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்நிலையில் அருகிலிருந்தவர்கள் சண்முகவெல் ராஜன் ரத்த வெள்ளத்தில் ரோட்டில் கிடப்பதை பார்த்து உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சம்பவத்தை அறிந்த விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அல்லம்பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் இதற்கு சண்முகவேல் ராஜன் தான் காரணம் என பலரும் கூறி வந்துள்ளனர்.

இதையடுத்து அதற்கு பழிக்கு பழி வாங்கவே இச்சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் தீவிரமாக அலசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பிரமுகர் ஒருவர் நள்ளிரவில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.