மீண்டும் கேப்டனான ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி இரண்டு போட்டிகளுக்கும் தொடருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக ரோஹித் சர்மா நியூஸிலாந்திற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் மற்றும் தொடரிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


விராட் கோஹ்லி தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இவருக்கு மாற்று வீரராக யாரும் அறிவிக்கப்படவில்லை.

விராட் கோஹ்லி ஐசிசி 2018 ன் முக்கிய மூன்று விருதுகளை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ராவிற்கும் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்கது.

கடந்த ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மனைவியுடன் நியுசிலாந்தில் உற்சாகமாக பொழுதை கழிக்க விராட் கோலியே அணியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.