பேட்டில் படாத பந்து! அவுட் கொடுக்காத நடுவர்! ஆனால் நடையை கட்டிய கோலி! வெடித்தது சர்ச்சை!

பந்து பேட்டிலும் படாத நிலையிலும் நடுவரும் அவுட் கொடுக்காத நிலையில் தானாக கோலி விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ஆட்டத்தின் 48வது ஓவரை அந்த அணியின் முகமது ஆமிர் வீசினார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 77 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.  ப்போது 48வது ஓவரின் 4வது பந்தை பவுன்சராக முகமது ஆமீர் விசினார்.

அந்த பந்தை ரைட் சைடு பலமாக அடிக்க விராட் கோலி முயற்சி செய்தார். ஆனால் பந்து பேட்டில் சிக்காமல் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் கையில் கேட்சாக மாறியது. இரண்டு மனதில் இருந்த சர்ப்ராஸ் அவுட் கேட்கவில்லை.

ஆனால் பந்து வீச்சாளர் ஆமிர் அவுட் கேட்க நடுவர் யோசித்துக் கொண்டிருந்தார். இத்ந நிலையில் சற்றும் தாமதிக்காத விராட் கோலி மைதானத்தில் இருந்து பெவிலியனை நோக்கி நடையை கட்டினார்.

அதன் பிறகு தான் நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் அதற்குள் கோலி மைதானத்தை பாதி தூரம்கடந்திருந்தார்.  நடுவர் அவுட் கொடுக்காமலேயே கோலி வெளியேறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதன் பிறகு ரீப்ளேவில் பார்த்த போது பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதில் குழப்பம் நீடித்தது. பிறகு அல்ட்ரா எட்ஜ் வசதியை பயன்படுத்திய போதும் பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. அப்படி இருந்தும் கோலி ஏன் நடையை கட்டினார் என்று புரியாத புதிரானது.

மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் மீதான மன ஒருங்கிணைப்பை இழந்து கோலி அப்படி செய்திருக்கலாம் என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி இப்படி அவுட் ஆகாமலேயே அவுட் என மைதானத்தில் இருந்து வெளியேறியதை ரசிர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.