சமூக வலைதளங்களில் வைரலாகும் தோனி செய்த ரன் அவுட்!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் வென்றுள்ளது. இந்த போட்டியில் டோனி செய்த ரன் அவுட் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த ரன் அவுட் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.


இந்த போட்டியில் நியூஸிலாந்து சேஸ் செய்து கொண்டிருந்த போது 36 வது ஓவரை இந்திய அணியின் கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்து நியூஸிலாந்து பேட்ஸ்மேன் நீஷமின் காலில் பட்டது.

இந்திய அணியின் வீரர்கள் நடுவரிடம் எல் பி டபிள்யு அப்பீல் செய்தனர். இந்த நேரத்தில் நீஷம் ரன் எடுக்க முயற்சித்தார். அனால் பந்து டோனியின் அருகே தான் உள்ளது என அறியாமல் அவர் ஒரு அடி எடுத்து வைத்தார். பின்னர் பந்து டோனியின் அருகே தான் உள்ளது என்பதை அறிந்து திரும்ப முயன்றார் நீசம். அனால் அதற்குள் டோனி பந்தை நேரடியாக ஸ்டம்பில் வீசி அவரை ரன் அவுட் செய்தார்.

இந்த ரன் அவுட் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. ஏனென்றால் நியூஸிலாந்து அணியின் நீசம் பந்துகளில் ரன்களை எடுத்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார். இவர் அவுட் ஆகி வெளியேறியதால் இந்திய அணி எந்த நெருக்கடியும் இல்லாமல் வெற்றி பெற்றது.

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்
ஒரு கட்டத்தில் இந்திய அணி 18 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து திணறியது. பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் விஜய் ஷங்கர் மற்றும் அம்பதி ராயுடு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி இந்திய அணியை சறிவிலிருந்து மீட்ட விஜய் ஷங்கர் 45ரன்களுக்குஆட்டமிழந்தார்
பின்னர் அம்பதி ராயுடு கேதார் ஜாதவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடு 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேதர் ஜாதவ்  34 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹர்டிக் பாண்டியா தனது அதிரடியில் கலக்கினார். இவர் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இந்தியா அணி 49.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்கவீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் நீஷம் அதிகபட்சமாக  44 ரன்களும் , வில்லியம்சன்39ரன்களும்எடுத்தனர்

நியூஸிலாந்து அணி 44.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற விகிதத்தில் வென்றுள்ளது. இந்திய அணியின் சார்பாக சஹால் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு ஆட்ட நாயகனாகவும்,ஷமி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யபட்டார்