வேற்று கிரகவாசி என்னை கர்ப்பமாக்கிவிட்டான்! இளம் பெண் வெளியிட்ட அதிர்ச்சி ஸ்கேன் ரிப்போர்ட்!

கால எந்திரத்தில் பயணித்து கி பி 3500 ஆம் ஆண்டுக்கு சென்றதாகவும் வேற்று கிரகவாசியுடன் இணைந்து கருவுற்றதாகவும் ஒரு பெண் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


தனது பாதுகாப்பு கருதி தனது அடையாளத்தையோ சொந்த நாட்டையோ வெளியிட விரும்பாத அந்தப் பெண் தனது முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் பேசியுள்ள அந்தப் பெண் பாரிஸ் நகரில் தான் ஒரு ஒரு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் படித்ததாகவும் அப்போது அனுமதி கட்டுப்படுத்தப்பட்ட வேதியியல் ஆய்வகத்தில் தான் ஓர் ஆண்டுகள் பயிற்சி பெற்றதாகவும் கூறுகிறார்

ஒரு ஆண்டுக்குப் பின் ஒருமுறை தான் அந்த ஆய்வகத்தில் இருந்த கால எந்திரத்தை பயன்படுத்தியதாகவும் அதன் மூலம் 3500-ஆம்  ஆண்டுக்கு சென்றதாகவும் அந்த பெண் கூறுகிறார். அப்போது அந்த காலகட்டத்தில் இருந்தவர்களால் தனக்கு பல சித்திரவதைகளும் கொடுமைகளும் நேர்ந்ததாக கூறும் அவர் அதனை விவரிக்க விரும்பவில்லை என்கிறார்

தற்போதிலிருந்து 5 மாதங்களுக்கு முன்பு 3500-ஆம் ஆண்டு காலகட்டத்திய வேற்று கிரகவாசியால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கருவுற்றதாகவும் அந்தப் பெண் தெரிவிக்கிறார். ஒரு வழியாக தான் 2019 ஆம் ஆண்டுக்கு திரும்பிய நிலையில் விரைவில் மனித இனத்துக்கும் வேற்றுகிரகவாசிக்குமான குழந்தையை பெற இருப்பதாக கூறுகிறார் 

அதனால் நிகழ போவதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் அதற்கான தீர்வை தன்னால் யோசிக்க கூட முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார் இணையதளத்தில் வைரலாகும் இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.