வெளியூர் சென்று திரும்பிய ஓனர்..! கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய ஒட்டகம்! நெகிழ வைத்த வீடியோ!

உரிமையாளருக்கு அதன் செல்லப்பிராணி அன்பு செலுத்திய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.


சண்டிகர் அருகே வனத்துறை அதிகாரி ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, "நாம் எதை செய்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும். அன்பு ஒன்றுதான் மிச்சம்" குறிப்பிட்ட்டிருந்தார். 

அந்த வீடியோ பதிவில் நீண்ட நாட்களாக உரிமையாளரை பிரிந்திருந்த ஒட்டகம் ஒன்று, மீண்டும் அவரை பார்த்ததும் கொஞ்சிய படி அன்பு செலுத்தியது. இந்த வீடியோ பதிவு பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.

மனிதர்களைவிட செல்லப்பிராணிகள் மிகவும் உயரியவை என இந்த பதிவு நிரூபித்து இருப்பதாக சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்