வயக்காட்டில் புகுந்து விளையாடிய பாம்பை பிடித்து இடுப்பில் கட்டிய நபர்..! வைரலாகும் வீடியோ! ஆனால்..?

சென்னை: பாம்பு போல பெல்ட்டை இழுத்து இடுப்பில் கட்டிக் கொள்ளும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் அதிகளவில் ஷேர் ஆகி வருகிறது.


வழக்கமாக, சமூக ஊடகங்களில், பாம்பு பிடிப்பவர்கள் பற்றி விதவிதமான வீடியோ பரவுவது வாடிக்கைதான்.  ஆனால், சற்று வித்தியாசமாக ஒரு நகைச்சுவை வீடியோ தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. ஆம், அந்த வீடியோவில், 3 பேர் உள்ளனர்.

அவர்களில் இருவரை தள்ளி நிற்கச் சொல்லும் நடுத்தர வயது நபர், அனைவரையும் உஷாரா இருக்கச் சொல்லிவிட்டு, மெல்ல மெல்ல நெல் வயலில் கையை விட்டு, கருப்பு நிறத்தில் ஒன்றை இழுக்கிறார். படிப்படியாக, அதை இழுக்க, பார்ப்பதற்கு பாம்பு போலவே அது இருக்கிறது. ஆனால், திடீரென அந்த கருப்பு நிற 'பாம்பை' தனது பேண்ட்டிற்கு பெல்ட் போல அணிகிறார். பிறகு, நன்றாக உற்று கவனித்தால் அது கருப்பு நிற பெல்ட் என தெரியவருகிறது. இதனை அருகில் இருப்பவர்கள் வெறுப்புடன் கண்டித்துவிட்டு நகர்கிறார்கள். 

இப்படியாக, முதலில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என பரபரப்பாக இருக்கும் இந்த வீடியோ, இறுதியாக நகைச்சுவையாக முடிகிறது. இதனை பலரும் விழுந்து சிரித்தபடி ஷேர் செய்து வருகின்றனர்.