போலீஸ் ஸ்டேஷனில் பெண் காவலர்களுக்கு அடி உதை! போதையில் ஐடி பெண் ஊழியர் சலம்பல்! பரபர வீடியோ உள்ளே..!

ஹைதராபாத்தில் குடிபோதையில் இருந்த பெண்ணை பாதுகாப்பிற்காக காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகளை திடீரென ஆத்திரமடைந்த பெண் அனைவரையும் அடிக்க முயற்சித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது.


ஹைதராபாத் மாநகரின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் குடிபோதையில் சாலையோரம் கிடந்ததை கண்ட காவல்துறை பெண் அதிகாரி, பாதுகாப்பிற்காக பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்துள்ளார்.  

போதை மயக்கத்தில் கண் விழித்து பார்த்த இளம்பெண் காவல் நிலையத்தில் இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் கத்தி கூச்சல் இட்டுள்ளார்.  

மேலும், சில பெண் அதிகாரிகளை அடிக்க முயற்சி செய்துள்ளார். இதன் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது.  

காவல்துறை அதிகாரிகளை போதை மயக்கத்தில் தாக்க முயற்சித்ததாக ஐடி இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து, பின்னர் அவரது நெருங்கிய நண்பருடன் இளம்பெண்ணை பெண் காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்  

சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் ஐடி துறையில் பணிபுரியும் இளம்பெண்கள் இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு நன்கு குடித்துவிட்டு இதுபோன்ற பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபடுவது குறித்து ஏராளமான வழக்கு பதிவுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.